திருப்பூர் பலவஞ்சிபாளையம் முதல் வீரபாண்டி வரை பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலைேயாரம் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குழாய் உடைப்பு ஏற்படும் பகுதிகளில் முழுவதுமாக பழைய குடிநீர் குழாயை அகற்றிவிட்டு புதுக்குழாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.