குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-31 14:13 GMT

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து கோவிந்தபேரி செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி இந்த சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் செய்திகள்