ஆற்றுபாலசாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-07-31 10:35 GMT
ஆற்றுபாலசாலையில் ஆபத்தான பள்ளம்
  • whatsapp icon
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த அனந்தமங்கலம் மகிமை ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வளைவு பகுதி சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பாலம் சேதமடைந்துள்ளதால் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மகிமை ஆற்றுபாலத்தில் உள்ள பள்ளங்களை மூடவும், பாலத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்