களியல்-குலசேகரம் சாலையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. அதன்பின்பு சாலையை முறையாக செப்பனிடாமல் ஜல்லி மட்டும் கொட்டி விட்டு சென்றுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் ஜல்லிகள் சாலையில் சிதறி கிடக்கின்றன. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பேபி ஜான், திற்பரப்பு.