கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் அமைந்துள்ளது. இங்கு ஆற்று வாய்க்கால் குறுக்கே பாலம் உள்ளது. ஆனால் அதன் கரையோரம் தடுப்பு சுவர்கள் இல்லை. இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதன் கரையோரம் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவ சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.