சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள்

Update: 2022-07-30 11:45 GMT

திருவாரூர் ஒன்றியம், அடியக்கமங்கலம் ஊராட்சியில் முகமதியா தெருவில் இருந்து கள்ளிக்கும் மாதா கோவில் பாலம் மற்றும் ஆண்டிப்பாளையம் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக அடிப்புதுச்சேரி, ஓடாச்சேரி, பழையவலம் மற்றும் சோழங்கநல்லூர் ,ஆமூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி சென்று வரும்  மாணவ-மாணவிகளும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்