தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு வழியாக செல்லும் கான்கிரீட் சாலை இந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே முடிவடைகிறது. இந்த சாலையை வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக அளவில் வாகனங்கள் சென்று வரும் இந்த கான்கிரீட் சாலையில் பல்வேறு இடங்களில் ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிகண்டன், இலக்கியம்பட்டி, தர்மபுரி.