நாகை மாவட்டம் திருமருகல் பகுதி கோபுராஜபுரத்தில் உள்ள சாலையோரத்தில் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக கிளைகளை படரவிட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனஓட்டிகள் கருவேல மரங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?