திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மெய்யூர் கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமால் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி வருவதும் வாடிக்கையாகி வருகிரது. மேலும் இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் சிரமப்பட்டே இந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கவனித்து விரைவில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.