இருளில் மூழ்கிய சாலை

Update: 2022-07-28 15:02 GMT

புதுவை-கடலூர் சாலை ரோடியர் பேட் ரெயில்வே கேட்டில் இருந்து முதலியார்பேட்டை வரை உள்ள மின்விளக்குகள் இரவில் எரியாமல் சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. மேலும் ரெயில்வே தண்டவாள பகுதியை கடந்து செல்லும் வழியில் சாலையின் நடுவே வேகத்தடையில் வெள்ளைக்கோடுகள் இல்லாததால் இரவு வேளையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கவனிக்க தவறினால் இடறி விழுந்து எழும் நிலை உள்ளது. எனவே, எரியாத மின்விளக்குகள், வேகத்தடை இருப்பதை எச்சரிக்கும் வகையில் வெள்ளைகோடு இட்டு சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்