பொள்ளாச்சியில் இருந்து நடுப்புணி செல்லும் சாலையில் சங்கம்பாளையம் காலனி உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் விபத்துகள் அதிகரிக்கிறது. கற்கள் பெயர்ந்து கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.