நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சி கடம்பரவாழ்க்கை-மேலவெளி கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இறந்தவர்களின் உடலை சேற்றில் சுமந்து மயனாத்துக்கு எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?