தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு நகரின் மத்திய பகுதி ஆகும். இந்த பகுதியை சுற்றி அரசு ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த புதுரோடு சாலை வழியாக தூத்துக்குடியில் இருந்து பெரிய அளவிலான வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள் அதிக அளவில் செல்வதால் சாலையில் தற்போது, ஆங்காங்கே பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த பள்ளத்தை சரிசெய்வதற்கோ? அல்லது புறவழிச்சாலை அமைப்பதற்கோ? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?