தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பஸ்கள் வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்ல தனி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சில இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் டவுன் பஸ்கள் இங்கு வந்து நிற்காமல் பிரதான சாலையிலேயே நின்று செல்லும் நிலை தொடர்கிறது. எனவே கான்கிரீட் கற்கள் பெயர்ந்த இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.