நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பில்லாளி பகுதி மத்தளங்குடி,அனவாசநல்லூர்,பில்லாளி கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலை பராமரிப்பின்றி ஆபத்தான சாலையாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக திருவாரூர்,நாகப்பட்டினம்,திருப்பயத்தாங்குடி,திருமருகல், திருக்கண்ணபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் நூற்றுகணக்கான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சாலை குண்டும்,குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?