விருதுநகரில் நகர் சாலைகள் சேதமடைந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மேலும் சேதமடைந்து பல்லாங்குழிகளாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதிலும் ரெயில்வே பீடர் சாலை, புல்லலக்கோட்டை சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், விருதுநகர்.