தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வி.இ.ரோட்டில் இருந்து தாமோதரநகர் வழியாக திருச்செந்தூர் ரோடு வரை செல்லக்கூடிய சாலையில் தினமும் ஏராளமானவர்கள் வாகனங்களில் செல்கிறார்கள். இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.