கடையம் யூனியன் திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து கேளையாபிள்ளையூர் விலக்கு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இதில் திருமலையப்பபுரம் விலக்கில் இருந்து பிஸ்மி நகர் வரை 3 வேகத்தடைகள் அடங்கும். ஆனால், இந்த வேகத்தடைகளின் மீது தற்போது வரை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அந்த வேகத்தடைகள் மீது வர்ணம் பூசுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.