சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-27 12:01 GMT

பாளையங்கோட்டை தாலுகா ரெட்டியார்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த மருத்துவமனையானது நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் நான்கு வழிச்சாைலயில் ரெட்டியார்பட்டி மலையை கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் இந்த சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகனங்களில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்