மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மே மாத்தூர் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் உள்ள சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது ஆகும். தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?