கரடு. முரடான சாலை

Update: 2022-07-27 10:22 GMT
விழுப்புரம் பொன்அண்ணாமலை நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு செல்லும் பிரதான தார் சாலை பல ஆண்டுகளாக குண்டும்- குழியுமாக படுமோசமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
........

மேலும் செய்திகள்