விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த நிலையில் பெய்த மழை காரணமாக சாலை மேலும் சேதம் அடைந்துள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.