கொட்டாரத்தில் இருந்து கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகம், அகஸ்தியர் புதுக்குளம் வழியாக கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த சாலையை விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வாகனங்கள் மூலமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.