கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி வழியாக நாகர்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மணக்குடி பாலம் வளைவு பகுதியில் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.