கோவை திருச்சி சாலையில் அரசு ஆஸ்பத்திரி எதிரே குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டப்பட்டது. அதன்பிறகு கான்கிரீட் கலவை கொண்டு அந்த குழி மூடப்பட்டது. ஆனால் சரிவர மூடப்படவில்லை. ஒரு பகுதியில் மீண்டும் குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த குழியை மூட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.