குண்டும், குழியுமான சாலை

Update: 2023-09-17 14:03 GMT

நெகமம் அருகே செட்டியக்காபாளையம் வடக்கு காடுபகுதியில் இருந்து குருநல்லிபாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்