நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் பருத்திபாடு-சிவந்திபட்டி இடையே சாலை குண்டும் குழியுமாக இருப்பதாக தேவேந்திர சுதாகர் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், உடனே நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.