திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இனாம்குளத்தூர்ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிவாடி கிராமம் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.