திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கொளக்குடியிலிருந்து தும்பலம் செல்லும் குண்டும், குழியுமானதை தொடர்ந்து அவற்றை சீரமைக்கும் பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஜல்லிகற்கள் பறிக்கப்பட்ட நிலையில் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.