புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி ஆதிமூலம் நகரில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க புதிய குழாய்கள் புதைக்கும் பணி நடந்தது. இதனால், சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.