திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பிரகாஷ் நகர் இரண்டாவது குருக்கு தெருவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகளால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும், பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?