பண்ருட்டி அருகே ஏ.கே.பாளையத்தில் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.