விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் இருந்து சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர் திருக்கை வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க புதிதாக தார் சாலை அமைக்க வேண்டியது அவசியம்.