விழுப்புரம் அருகே கோனூர் அண்ணாநகரில் சாலை ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் அவசர தேவையின் போது ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.