கோவை பீளமேடு ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. அந்த சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்தால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வாகனங்களும் பழுதாகி விடுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.