ஓமலூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் கருப்பூர் அடுத்து கரும்பாலை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்தநிலையில் அந்த பகுதியில் சிக்னல் விளக்கு மற்றும் சாலையில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் அங்கு சாலையை கடந்து செல்லும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து கூடுதல் மின்விளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.