காப்புக்காடு சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம், ஐரேனிபுரம் ஊர்களுக்கு இரு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இந்த முக்கிய சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், கடைகளுக்கு வரும் பயணிகள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலை பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.