ஈரோடு மேட்டூர் ரோட்டில் கல்யாண விநாயகர் கோவில் எதிரே உள்ள பகுதியில் பல நாட்களாக குழி ஒன்று காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். குழிக்குள் விழுந்து தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் குழியை உடனே மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?