நெகமம் அருகே காட்டம்பட்டி புதூர் முதல் நகரகளந்தை வரை செல்லும் சாலை பெயர்ந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. அந்த சாலையில் ஆங்காங்கே குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி நடுரோட்டில் பழுதாகி நின்று விடுகின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழை பெய்துவிட்டால், அந்த சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே உடனடியாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.