திண்டுக்கல் ஒத்தக்கண் பாலத்தில் இருந்து யாகப்பன்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.