கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி பாலப்பட்டிக்கு கரூர்- மணப்பாறை சாலையில் மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து தார் சாலை செல்கிறது. இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், சரியான பராமரிப்பின்மையாலும் தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தரமானதாக மாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.