திருவள்ளூர் மாவட்டம் ஏனம்பாக்கம் முதல் கல்பட்டு வரை உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.