தர்மபுரி ரெயில் நிலையத்திலிருந்து தொடங்கும் இருவழி சாலை தர்மபுரி- சேலம் பிரதான சாலையுடன் இணைகிறது. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தர்மபுரி வழியாக செல்லும் ரெயில்களில் வந்து செல்லும் ஏராளமான பயணிகள் இந்த சாலை வழியாக நடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் ரெயில் நிலைய சாலை இரவு நேரங்களில் வெளிச்சமின்றி இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையில் கூடுதல் மின் விளக்குகளை பொருத்தி இரவு நேரத்தில் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.