சூலூர் தாலுகா சோமனூரில் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாலம் குறுகலாக உள்ளதால், வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியவில்லை. இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த பாலத்தை இடித்துவிட்டு, அகலம் அதிகம் கொண்ட புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.