சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதியில் இருந்து சந்தைபுதூர் செல்லும் சாலையில் ெரயில்வே பாலம் அருகில் இருந்து சந்தைபுதூர் செல்லும் வரை உள்ள சாலை கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக அருகில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?