கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை என முக்கிய சாலைகள் உள்ளன. இதில் பெங்களூரு சாலையில் தாசில்தார் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த வளாகத்திலும், இந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக சுற்றி திரிகின்றன. எனவே சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களை பிடித்து அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?