திருவள்ளூர் ராமாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செல்லும் சாலை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சிறிது மழை பெய்தாலும் சாலை தெரியாத அளவிற்கு மழை நீர் தேங்குகிறது. அதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. எனவே, சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.