பண்ருட்டி ஒன்றியம் மேலிருப்பு கிராமம் தொட்டி ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து பொிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள நடவடிக்கை எடுப்பார்களா