சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2023-08-30 12:54 GMT
திருச்சி மாநகராட்சி பெரியமிளகுபாறையில் வழியாக காமராஜபுரத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை வரை உள்ள சாலையில் கடந்த 2 மாதங்களாக சீரமைப்பு பணி நடக்கிறது. இதற்காக சாலையில் ஜல்லி கற்கள் போட்ட படியே உள்ளது. இதனால் சாலையில் செல்லும் ஆட்டோ, இரு சக்கர வாகன டயர்கள் பஞ்சர் ஆவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்