சாலையின் குறுக்கே பள்ளம்

Update: 2023-08-30 11:27 GMT

திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கணக்குப்பிள்ளைபுதூர் வழியாக அரவக்குறிச்சி நகரப் பகுதிக்குள் செல்லும் பிரிவு ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு அது சரியாக மூடப்படாமல் தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் செல்வோர் அந்த இடத்தில் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்